மேலும் அறிய

தஞ்சை மாவட்ட கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரத்தையொட்டி குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பள்ளியக்கிரஹாரம் சிறை காத்த அய்யனார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வெளியூர் பக்தர்கள் நேற்று இரவே வந்து தங்கி வழிபட்டு சென்றனர்.


தஞ்சை மாவட்ட கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

அதன்படி, தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வெற்றிவேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி காலை 7 மணிக்கு மூலவருக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மேலவஸ்தா சாவடி குளக்கரையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவடி, அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர், முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல், தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில் உள்ள பால விநாயகர் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை பால் அபிஷேகம் நடந்தது.


தஞ்சை மாவட்ட கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

முன்னதாக ஏராளமான பக்தர்கள் காவிரி நகர் தென்பகுதியில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். பின்னர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

பின்னர், சுவாமிகளுக்கு அபிஷேக,  ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் வங்கி ஊழியர் காலனியில் வசிப்பவர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள செல்வ ராஜகணபதி கோயிலில் தனி சன்னதில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சண்முகார்ச்சணை ஆகியவை நடந்தது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் செல்வ ராஜகணபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை அம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இக்கோயிலில் அனைத்து சிறப்பு நாட்களிலும் வழிபாடு அர்ச்சனைகள் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடந்தது. மேலும் சண்முகார்ச்சனையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 1000 பேருக்கு மேல் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்வது சுவாமிமலை சுவாமிநாதசாமி கோயில். இங்கு இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget