பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - பக்தர்களே வசூல் எவ்வளவு தெரியுமா..?
பழனி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் எண்ணப்பட்டதில் 3 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் அமைந்திருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
EPS - Annamalai : எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை.. அடுத்து என்ன?
அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவதுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
Anna Death Anniversary: அண்ணா நினைவு தினம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி
அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 3 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாகவும் , தங்கம் 694 கிராமும், வெள்ளி 17,539 கிராமும் ,வெளிநாட்டு கரன்சி 692 நோட்டுகளும் கிடைத்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோவில் அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எணணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் அறங்காவலர் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் பக்தர்கள் உண்டியிலில் செலுத்திய காணிக்கைகள் 4 கோடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்