Palani Temple: தைப்பூச திருவிழா முடிந்தும் பழனியில் குவிந்து வரும் முருக பக்தர்கள்
தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.
பழனியில் தைப்பூச திருவிழா முன்னிட்டு 10ம் நாள் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவல பாதையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 556 கன அடியாக இருந்து 451 கன அடியாக குறைவு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தைப்பூசத் திருவிழாவி முடிந்து இன்றும் பழனியில் முருக பெருமான தரிசனம் செய்ய தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர். மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
Accident: தென்காசி: அதிகாலையிலேயே கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய கார் - லாரி - 6 பேர் பலி
தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் கடந்த 25ஆம் தேதி ஏழாம் நாளான அன்று பூச நட்சத்திரத்தில் தைப்பூச திருவிழாவில் அன்று மாலை தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டும் இன்று 10ம் நாளான இன்று வார விடுமுற நாள் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அழகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும், கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர். தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.