Navratri 2022 Day 3: நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டில் வணங்கப்படும் வாராகி அன்னை.
நவராத்திரியில் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடத்தப்படுகிறது.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி வழிபாட்டுக்குரிய நாட்களாகும். நவராத்திரியின் மூன்றாம் நாளில்.
மகிஷனை அழித்த ரூபத்தில், அன்னை வாராகியாக காட்சி தருகிறாள். அவள் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் எனப் போற்றப்படுகிறார்.
உலகையாளும் சக்தி வடிவான, அம்பாளின் அருளைப் பெற, நவராத்திரியானது, புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடத்தப்படுகிறது.
இந்த நவராத்திரி வழிபாட்டு முறையில் , நண்பர்கள், உறவினர்களை அழைத்து உபசரித்து தாம்பூலம் கொடுப்பது, என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கோவில்களைப் போலவே வீட்டில் உள்ள அன்னை சக்தியின் அவதாரங்களுக்கு விதவிதமான பூஜைகள், அலங்காரங்கள் செய்து உணவு படையலிட்டு சிறப்பாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதிலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது தேவியரை நினைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
நவராத்திரியின் மூன்றாம் நாளான புதன் கிழமை வாராகிக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் வாராகி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். எதிரிகளின் தொல்லை ,கண் திருஷ்டி, கடன் தொல்லை நீங்கவும், இன்று வாராகியை வீட்டில் வழிபாடு செய்லாம்.
அதேபோல் வீட்டில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று வாராஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். நவராத்திரியின் மூன்றாம் நாளில், வாராஹி அம்மனையும், இந்திராணி தேவியையும் வணங்கலாம். வாராகி அம்மன், அசுரனை அழித்த கோலத்தில் காட்சி தருவதாக ஐதீகம். இந்த நாளில், நீல நிற மலர்கள், கருந்துளசி ஆகியவற்றை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சித்து வழிபடுவது சிறப்பாகும்.
தைரியத்துக்கு அதிபதியான வாராஹி அம்மனை வழிபட்டால்,இனம் புரியாத பயம் ,மன குழப்பம், எதிரிகள் காணாமல் போவார்கள் என்பது நம்பிக்கை. அதேபோல் சப்த கன்னியர்களில் ஒருவரான இந்திராணி தேவியின் வாகனம் வெள்ளை யானையாகும். இந்திராணியை வணங்கினால், உயர் பதவி, சொத்து சேரும் என்பது ஐதீகம்.
வீட்டில் கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினந்தோறும் அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை கூறி வேண்டுதல்களை முன் வைக்கலாம்.வாராகி அன்னைக்கு உரிய மூன்றாம் நாளில் 32 மாலைகள் உள்ள கவசத்தை பாராயணம் செய்து பூஜை செய்யலாம்.
இந்த நாளில் வாராஹி அம்மனின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். திருவுருவப்படம் இல்லை என்றால், அம்மன் படத்துக்கு மாலை சாற்றி வழிபடலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், பூக்கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் ஆரத்தி எடுக்க வேண்டும்.
அதேபோல் நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குல தெய்வத்தையும் பிரார்த்தித்து , விளக்கேற்றி, நவராத்திரி முடியும் அகண்ட தீப வழிபாடு செய்யலாம்.
9 நாட்களும் காலை, மாலை, இரவில் அணையா விளக்கான ,அகண்ட தீபம் அணையாமல் எரிய வேண்டும்.
மந்திரம் : ஓம் தேவி சந்திரகண்டாயை நமঃ ॥
வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு,சம்பங்கி, துளசி, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை
சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தனதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.
நிறம்: கருநீலம்.
நைவேத்தியம்: காலை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை காராமணி சுண்டல் படைக்கலாம்.
பாடல் பகுதி: மகா வாராகி பாடலின் 15வது பாசுரம் -
ஐயும் கிலியும் என்று தொண்டர் போட்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்க்கொடியே
பலன்கள்: பயம் நீக்கும், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் காணாமல் போவார்கள்