மேலும் அறிய
Advertisement
Chithirai Festival: மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்தில் , கைலாச பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் அருள்பாலித்தனர்
மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 3ஆம் நாளில் மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்தில் , கைலாச பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா மூன்றாம் நாள் காமதேனு வாகனத்தில் மீனாட்சியம்மனும், கயிலாய பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் மாசி வீதிகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.@SRajaJourno | @abpnadu pic.twitter.com/CtPolFQ4KK
— arunchinna (@arunreporter92) April 26, 2023
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுடைய சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 3-வது நாள் நிகழ்வாக நேற்று இரவு கோயில் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்பட்டியில் மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கைலாசபர்வத வாகனத்திலும் எழுந்தருளினர். அப்போது பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதனையடுத்து சுவாமியும் அம்மனும் தெற்கு மாசி, மேலமாசி, வடக்குமாசி, கீழமாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி உலாவந்து அருள்பாலித்தனர்.
சுவாமியும் அம்மனும் வீதி விழா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரு புறங்களிலும் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்து சென்றனர். சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.
மேலும் படிக்க: CM MK Stalin: ”தமிழ்க் கனவு நிகழ்ச்சி இனி அனைத்து கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் நடைபெறும்” - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion