![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை - திரளான பெண் பக்தர்கள் வழிபாடு
சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் நடைபெற்ற ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
![திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை - திரளான பெண் பக்தர்கள் வழிபாடு Mayiladuthurai thiruvenkadu puthan isthalam temple sri Lakshmi kubera pooja - TNN திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை - திரளான பெண் பக்தர்கள் வழிபாடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/20db4c1ec876c34b4194ab5ebce643f61721983457288733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் புதன் ஸ்தலத்தில் நடைபெற்ற ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குறவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.
மேலும் பல சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.
நெளிந்த பூச்சி புழுக்கள்; அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கிய செல்வப் பெருந்தகை - நடந்து என்ன?
ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை
இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெற்றது. சென்னை ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேர சன்னதியில் இருந்து லஷ்மி குபேர உற்சவமூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் நவகிரக தலங்களில் புதன் ஸ்தலமாக அருள் பாலிக்கும் சுவேதாணேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மண்டபத்தில் குமரன் சன்னதியில் எழுந்தருளப்பட்டது. தொடர்ந்து அங்கு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெற்றது. அதில் திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குபேர பூஜையில் நாணயத்தை கொண்டு குபேர பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து லட்சுமி குபேர பூஜையில் பங்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்ரீ லட்சுமி குபேர நாணய பிரசாதம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேனா நோட்டுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து புதன் பகவான் சன்னதியில் எழுந்தருளி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜையில் வழிபாடு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)