மேலும் அறிய

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை - தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்

தாயாரின் ஆசையை நிறைவேற்ற ஐந்து ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கோயில்களுக்கு தனது தந்தையின் ஸ்கூட்டரில் அமர வைத்து புனித யாத்திரை செல்லும் மகன் மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.

கர்நாடக மாநிலம் மைசூர் போகாதி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் 44 வயதான கிருஷ்ணகுமார். தனியார் எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் கார்ப்பரேட் டீம் லீடராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார், தனது தந்தையாரின் இறப்பிற்கு பிறகு தனது தாயார் சூடா ரத்தினம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, தந்தையாரின் ஸ்கூட்டரில் அமர வைத்து, இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு மாத்ரு சேவா சங்கல்ப புனித யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை -  தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்

கடந்த 2018 -ஆம் ஆண்டு யாத்திரையை தொடங்கி இதுவரை சுமார் 61 ஆயிரம் கி.மீ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வழிபாடு மேற்கொண்டுள்ள தாயும், மகனும் மயிலாடுதுறைக்கு வந்தடைந்தனர். அவர்களை மயிலாடுதுறையில்  சிவனடியார்கள் வரவேற்று உபசரித்து சிவபுரம் வேத ஆகம பாடசாலையில் தங்க வைத்தனர்.

Vegetables Price: கிடுகிடுவென ஏறும் முருங்கைக்காய் விலை... இன்றைய காய்கறி விலை நிலவரம் இதுதான்!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை -  தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்

இதையடுத்து பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கிருஷ்ணகுமார் தனது தாயாருக்கு பாத பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து, மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் வழிபாடு மேற்கொண்ட பின்னர் சிதம்பரம் நோக்கி தனது மாத்ருசேவா சங்கல்ப புனித யாத்திரையை தொடர்ந்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே கடக்கம் ஊராட்சியில் 7.08 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் மணல்மேடு அருகே உள்ள கடக்கம் ஊராட்சியிலிருந்து தொடங்கி சித்தமல்லி வழியாக குறிச்சி ஊராட்சி வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை -  தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அரசுக்கு சாலையை சீரமைக்க வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கை பலனாக இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் 7.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை மற்றும் சாலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடக்கம் ஊராட்சியில் இன்று தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட குழு உறுப்பினர் இளையபெருமாள்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hanuman Jayanti 2022: அனுமன் ஜெயந்தி விழா- கோயில்கள் முன் குவிந்த பக்தர்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Biggboss Tamil Season 8 LIVE: ”மகாராஜா” ரீல் மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget