மேலும் அறிய

ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் அமைந்துள்ளது பழமையும், பிரசித்தியும் பெற்ற ராகு - கேது பரிகார ஸ்தலமான கார்கோடகநாதர் ஆலயம். இங்கு முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன், தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் இது என்பதால், இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்பட்டு வருகிறது. 

ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம்

1951 -ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து  திருக்கல்யாண உற்சவம் விழா நடந்தது. இதையொட்டி கோயில் மகா மண்டபத்தில் அருள்மிகு கைவல்லி சமேத ஸ்ரீ கார்க்கோடகநாதர் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர், பெண்கள் மாரியம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Vani Jayaram Passes Away: 'மறைந்தது கானக்குயில்..' இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார் - ரசிகர்கள் சோகம்..!

ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம்

சுவாமிக்கு பாலால் கால் கழுவி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்களின் நலுங்கு உற்சவம் செய்தனர். தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு சாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பட்டாடை உடுத்தி திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

OPS: இரட்டை இலையில் யார் போட்டியிட்டாலும் ஆதரவு - ஓ.பி.எஸ். பரபரப்பு அறிக்கை..! இ.பி.எஸ்.க்கு கிரீன் சிக்னலா?

ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம்

இதேபோன்று மற்றொரு ஆன்மீக நிகழ்வாக மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் தை மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 வது ஆலயமுமான பிரசித்தி பெற்ற பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 

Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாது..! ஆதரவு ஓ.பி.எஸ்.கா? இ.பி.எஸ்.கா.? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவம்

சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தில், தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. பரிமள ரெங்கநாயகி தாயார் மகாலெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வாழ்வு வளம்பெறவும், உலக நன்மை வேண்டியும் 108 திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

Srilanka: இலங்கை 75-வது சுதந்திர தின விழா; கரிநாளாக அறிவித்து பேரணி நடத்திய தமிழர்கள்..! காரணம் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
காவிரிக்கு வந்த சோதனை! காசிக்கு இணையான புண்ணிய பூமியில் வாட்டர் கேன் தண்ணீரில் தர்ப்பணம் கொடுத்த அவலம்!
காவிரிக்கு வந்த சோதனை! காசிக்கு இணையான புண்ணிய பூமியில் வாட்டர் கேன் தண்ணீரில் தர்ப்பணம் கொடுத்த அவலம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Embed widget