மேலும் அறிய

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மரியாதை!

பல்வேறு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்கு பங்கேற்பதற்காக  பாதயாத்திரை செல்லும் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு, மயிலாடுதுறையில் முஸ்லிம் ஜமாத்தார்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமாக திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில், பேரளம், திருக்குவளை உள்ளிட்ட 27 இடங்களில் தேவஸ்தானங்கள் உள்ளன. இவற்றின் கும்பாபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 27ஆம் தேதி பேரளம் ஸ்ரீ பவானி அம்மை உடனாகிய சுயம்பு நாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ஒன்றாம் தேதி ஸ்ரீ ஞானபிரக தேசிக சுவாமிகள் குருமூர்த்த நூதன ஆலய மகா கும்பாபிஷேகம், மூன்றாம் தேதி கிடாரம் கொண்டான் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம், 12 -ஆம் தேதி திருக்குவளை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மரியாதை!

இவற்றில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஆதீன மடத்திலிருந்து  ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் தருமபுரம் ஆதீன மடாதிபதி பாதயாத்திரையை துவங்கினார். ஒட்டகம், குதிரை ஆகியவை முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு வீடுகள் தோறும் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். 


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மரியாதை!

தொடர்ந்து, மயிலாடுதுறை தைக்கால் தெரு பள்ளிவாசல் சார்பாக ஜமாத்தார்கள் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் அஜீஸ் தலைமையில் இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்கள், அவர்களுக்கு ஆதீனம் சார்பில் மடாதிபதி பொன்னாடை போர்த்தி பதில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாதயாத்திரை நிறைவு செய்து அடுத்த மாதம் 24 -ஆம் தேதி மயிலாடுதுறை மடத்திற்கு மீண்டும் தருமபுரம் ஆதீனம் திரும்புகிறார்.


மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டுகளுக்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், வட்டார வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, கால்நடை துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம். 


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து மரியாதை!

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரக்கீரங்குடி ஊராட்சியில் இது தொடர்பாக முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை  சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேளாண் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சட்ட‌மன்ற உறுப்பினரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு வசதி, இடுகாட்டு வசதி ஏற்படுத்திதர வேண்டி ஏராளமானோர் கிராம மக்கள் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
"கல்லில் ஆடிய நர்த்தனம்: சோழர் கால சிற்பிகளின் வியக்கவைக்கும் உளி வீச்சு!" எங்கு தெரியுங்களா?
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET Re-exam Date: ரத்து செய்யப்பட்ட நீட்.. மறுதேர்வு தேதி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!
NEET Re-exam Date: ரத்து செய்யப்பட்ட நீட்.. மறுதேர்வு தேதி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!
Gold and silver rate today : ரூ. 10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி.! இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ. 10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி.! இன்றைய விலை நிலவரம் இதோ...
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
Fuel Price Hike: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரிப்பு!
Fuel Price Hike: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரிப்பு!
EPS vs SPV: இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!
அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
Embed widget