சீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீட மகா கும்பாபிஷேகம் - தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம்...!
Mayiladuthurai: சீர்காழி அபய மீனாட்சி சித்தர் பீட மகா கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழியில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பழைமையான அபய மீனாட்சி சித்தர் பீட மகா கும்பாபிஷேக விழாவில் தருமை ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அபயம் மீனாட்சி சித்தர் பீடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அபயம் மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலை கிராமவாசிகள் புனரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பு பங்களிப்புடன், கோயில் கட்டிடங்கள் புதுப்பித்தல், புதிய கட்டங்கள், சிலை வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தது.

யாகசாலை பூஜை
அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவிற்கான நல்ல நாள் குறித்து கும்பாபிஷேக தினமான இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை இரண்டாவது கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகா பூர்ணாகதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Pete Hegseth to Rajnath: போடா.. அந்த அமெரிக்காவே நம்ம பக்கம் இருக்கு.!! இனி இறங்கி அடிக்க வேண்டியதுதான்...

புனிதநீர் ஊற்றல்
பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.





















