சூர்யாவின் ரெட்ரோ - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
ரெட்ட்ரோவில் சூர்யாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் நல்ல கதையோடு மிரட்டியிருக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படமாக சூர்யாவுக்கு அமைந்துள்ளதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பூஜா ஹெக்டேவும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம்.
ரெட்ரோ படம் மேஜிக்கல் தருணங்களை கொண்டுள்ளதாகவும் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் சிறந்த படத்தை தந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இது. நல்ல கதை, நல்ல உருவாக்கம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்,
சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ படத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.