மேலும் அறிய

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு..!

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வான திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் பெருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.  இதில் 11 -ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். 

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு..!

பல்லக்கு தூக்கும் நடைமுறை 

இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு..!

முதல்வரிடம் சென்ற கோரிக்கை 

பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப்பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர் அதனைத் தொடர்ந்து பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய  மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டினப்பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், இந்நிகழ்விற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு..!

கொடியேற்றத்துடன் 

இந்நிலையில் இந்தாண்டு தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா மே-20 -ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 26-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ம் தேதி திருத்தேர் உத்ஸவமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 30 -ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  சிவிகை பல்லக்கில்  பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கு உள்ளார்.

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு..!

திருத்தேரோட்டம் 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் விழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் எழுந்தருளும் நிகழ்வும்  நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget