ஒரே உண்டியலில் மட்டும் ரூ.13 லட்சம் வசூல்..பக்தர்களின் காணிக்கையில் குவிந்த அதிசயம்! எந்த கோயில் தெரியுமா?
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியலில் குவிந்த காணிக்கை. ஒரே உண்டியலில் மட்டும் ரூ.13 லட்சம் வசூல்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.13 லட்சம் வசூல் கிடைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்த பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் ரூ.13 லட்சம் காணிக்கை இருந்தது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது.
இதில், வைர கிரீடம் திருப்பணி உண்டியல் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ.13 லட்சம் காணிக்கை இருந்தது. அறநிலையத்துறை நாகை மண்டல துணை ஆணையர் ராணி, கோயில் செயல் அலுவலா் மாதவன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.13 லட்சம் ரொக்கம், 10.5 கிராம் தங்கம், 49.5 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
உண்டியல் என்னும் பணியில் பள்ளி மாணவர்கள் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று பக்தர்களின் காணிக்கையை எண்ணினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் வரலாறு
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறார். கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலை போல, இந்த கோயிலையும் தட்சிண துவாரகை இன்று இந்துக்கள் அழைக்கின்றனர். ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்ந்துள்ள இந்தக் கோயில் வளாகத்தில் 16 கோபுரங்கள், 7 தூண்கள, 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் உள்ளன.
பங்குனிப் பெருவிழா
ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். பின்னர், 12 நாட்கள் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்.
தேரோட்டம்
ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மொத்தம் ரூ. 26.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி நிறைவுற்றது.





















