மேலும் அறிய

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மெய் சிலிர்க்க வைத்த 108 வீணை இசை வழிபாடு !

வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் , இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா - விஜயதசமியை முன்னிட்டு  கல்வி - கலை மேம்பாட்டிற்காக வீணை இசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த 108 வீணை இசை வழிபாடு - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
 
சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை பண்டிகைகள்
 
புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், தேவி வழிபாடும், பெண் தெய்வ போற்றுதலும் கொண்டு அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்க்கை அம்மன் தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.
 
ஒவ்வொரு பகுதியில் மாறுபடும் வழிபாடுகள்
 
தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜையானது முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். சரஸ்வதி தேவி, மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.
 
108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது
 
 உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைற்று முடிகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாள் விழாவான விஜயதசமியை முன்னிட்டு பள்ளி,  கல்லூரி மாணவ-மாணவியர்களின் கல்வி கலை மேம்பாட்டிற்காக கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வீணைஇசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
 
பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்
 
இந்த வீணை இசை வழிபாட்டில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான  மாணவிகள், பேராசிரியர்கள்   வீணை வழிபாட்டில் பங்கேற்று வீணையை இயற்றி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடப்பட்டன, விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன, வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் , இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget