அரோகரா அரோகரா கோஷம்... காஞ்சி குமரக்கோட்டம் வெள்ளி தேர் உற்சவம் - முருகப் பக்தர்கள் பரவசம்
Kumarakottam Murugan Temple: சித்திரை மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி வெள்ளித்தேர் உற்சவத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில்
தல வரலாறு
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் கூட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி, முருகப்பெருமானை அலட்சியம் செய்த பிரம்மனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரம்மனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரம்மனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது. காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும் முருகருக்கு முக்கிய கோவிலாக இந்த கோவில் உள்ளது. குறிப்பாக முருகருக்கு இருக்கக்கூடிய அறுபடை கோவில்களுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் விளங்குகிறது. இப்போ கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் பொழுது ஏராளமான பக்தர்கள் வெளியூரில் இருந்து வந்தும் சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ஆடி கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.