Kulasai Thiruvizha : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. குவிந்த பக்தர்கள்..
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற தசரா விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற தசரா விழாவையொட்டி, வெகு விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
முத்தாரம்மன் கோவில்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.
உலக புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
10வது நாள்:
விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-வது நாளான இன்று, அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெற்றது.
இந்தாண்டு தசரா திருவிழா, கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று, பத்தாம் நாளான இன்று முத்தாரம்மன் கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அதையொட்டி 10வது நாளான இன்று காணிக்கைகளை கோவில் உண்டியலில் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தசரா விழாவிற்கு மாலையணிந்து விரதம் இருந்து (வேடமணிந்து) செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் கூடிக்கொண்டே வருகிறது!. 90-99களில் எங்கள் பகுதிகளில் குலசைக்கு மாலையணிந்து செல்லும் ஒரு பக்தரை கூட காணமுடியாது... pic.twitter.com/pNaX45tqfb
— Mahesh M (@mahesh74391485) September 28, 2022
சூரசம்ஹாரம்:
அதன்படி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) October 5, 2022
சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் pic.twitter.com/AXE4X9wddf
பக்தர்கள் கூட்டம் :
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிந்து விரதம் இருக்க கூடிய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் காப்பு வழங்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், பாதுகாப்புக்காக 2 ஆயிரம் பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
பல்வேறு வேடங்கள்:
பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்ற தசரா திருவிழாவில் காப்பு அணிந்த பக்தர்கள் ராஜா வேடம், காளி வேடம், அம்மன் வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று அதனை மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறக்கூடிய பத்தாம் திருநாளில் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்