மேலும் அறிய

Kollangudi kali: பழிபோட்டவரை பலிபோடும் நம்பிக்கை; கொல்லங்குடியில் நீதி தேவதையாக பார்க்கப்படும் காளி தெய்வம்!

இன்றும் மக்கள்  திருட்டு, துரோகம், ஏமாற்றுதல் போன்ற செயல்களை தட்டிக் கேட்க எதிரியை பயமுறுத்த, நீதி கேட்க காசு வெட்டி வழிபட்டு வருகின்றனர்.

Kollangudi kali:சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும், ஏன் தலைநகர் சென்னையில் இருந்தும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வணங்கி தன் குறைகளைக் கூறி மன நிம்மதி அடைகின்றனர்.
 

கொல்லங்குடி

”மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கையிலிருந்து 12 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் கொல்லங்குடி. இன்று கொல்லங்குடி என்று அழைக்கப்பட்டாலும் இது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டில் கொல்லன்குடி என்று பதிவாகியுள்ளது. தச்சு வேலை,  தங்க வேலை செய்பவர்களை, கொல்லர்கள் என்று அழைப்பது பொது வழக்கு. அப்படிப்பட்ட இடமாகவே இது விளங்கியிருக்க வேண்டும். மருது பாண்டியர்கள் காலத்திலும்  இங்கே ஆயுதம் செய்யும் பட்டறை இருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வூர் பகுதியில் பரவலாக பெருங்கற்கால  இரும்பு உருக்காலை எச்சக் கழிவுகள் காணப்படுகின்றன. ஊர் மக்களிடம் இவ்வூர் 300 ஆண்டுகள் பழமையானது என்ற கருத்தே நிலவுகிறது. ஆனால் தரவுகளின் அடிப்படையில் இவ்வூர் மிகப்பழமையானதாக உள்ளது.
 

நீதி தேவதை கொல்லங்குடி காளி

 
கொல்லங்குடியைச் சுற்றி எண் திசையிலும் வாழக்கூடிய மக்களின் நீதி தேவதையாக விளங்குவது கொல்லங்குடி காளியம்மனாகும். பொதுவாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் அதிகமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். கோயிலில் பூசை செய்து வரக்கூடிய மரபினரின் முன்னோர்கள் இக்காளியை இங்கு உண்டு பண்ணியதாக கூறுகின்றனர். சிவகங்கை வேலுநாச்சியார் காலத்தில் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதருக்கும் கும்பெனியாருக்கும் காளையார்கோவிலில் நடந்த போரில் முத்து வடுக நாதர் இறந்தபோது வேலு நாச்சியார் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆலோசனையின் படி தப்பிச் சென்று திண்டுக்கல் ஹைதர் அலி கோட்டையை அடைந்தார். வேலுநாச்சியாரை தேடிச்சென்ற வெள்ளை யர்கள் இப்பகுதியில் ஆடு மேய்த்துக்  கொண்டிருந்த உடையாளிடம் வேலுநாச்சியார் பற்றி கேட்க அவர் சென்ற பகுதி தெரிந்தும் காட்டிக் கொடுக்காது வெள்ளையரின் வாளால் வெட்டுப்பட்டு இறந்தாள். இறந்த  உடையாளே வெட்டுடையாளாக, வெட்டுடைய காளியாக விளங்குவதாகவும், பின்னாளில் வேலுநாச்சியார் சிவகங்கையின் அரசு பொறுப்பேற்று பிறகு வைரத் தாலி ஒன்றை அம்மனுக்கு பரிசளித்ததாகவும் கூறுகின்றனர். இன்றும் மக்கள்  திருட்டு, துரோகம், ஏமாற்றுதல் போன்ற செயல்களை தட்டிக் கேட்க எதிரியை பயமுறுத்த, நீதி கேட்க காசு வெட்டி வழிபட்டு வருகின்றனர்.
 

இல்லங்களிலும் உள்ளங்களிலும் காளி

 
கொல்லங்குடியில் நடைபெறும் ஆடி 18ம்நாள் குதிரை எடுப்பு விழாவில் நகர் வணிகர் சங்கத்தினரால் பூத்தட்டு விழா காளியம்மனுக்கு மிகச் சிறப்பாக பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா அம்மன் அம்பு போடும் நிகழ்வும் பார்ப்பவரை மனம் கொள்ளச் செய்யும். பங்குனி மாதம் சுவாதிரை நட்சத்திரத்தில் பதினோரு நாள் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில், வாகனத்தில் அம்மன் வந்து அருள் தருகிறார். ஒன்பதாம் நாளில் தேர்த் திருவிழாவும், பத்தாம் நாளில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பதினோராம் நாளில் விடையாற்றி ஊஞ்சல் விழா.. நடைபெறுகிறது. இந்த பதினோரு நாட்களுக்கு மேலும் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும். கோயில் நிர்வாகம் இந்து அறநிலைத்துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது. பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கொல்லங்குடி காளி, பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறாள்” என்று தனது சொந்த ஊர் குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget