மேலும் அறிய

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

Sabarimala Ayyappan Temple Closed: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் 2024-2025ம் ஆண்டிற்கான மண்டல-மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து 5 நாட்கள் கோவில் திறந்திருக்கும் இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?
சபரிமலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆண்டிற்கான மண்டல-மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து ஜனவரி 20ம் தேதியான இன்று காலை 06.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 16ம் தேதியன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை காலத்தின் போது மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிசம்பர் 26ம் தேதியன்று மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, அன்று இரவு கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

மகரவிளக்கு மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மகர மாத பூஜைகள், படி பூஜை ஆகியவை ஜனவரி 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 20ம் தேதியான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. காலை நடைபெற்ற பூஜையில் பந்தளம் ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா மட்டும் கலந்து கொண்டார். அவரது தரிசனத்துடன் நடை அடைக்கப்பட்டது. சாமி ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்பட்ட திருவாபரணங்கள், திருவாபரண சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அய்யனை வணங்கி, அனுமதி பெற்று மீண்டும் பந்தள அரண்மனை நோக்கி திருவாரபண பெட்டி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. ஜனவரி 23ம் தேதி திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தள அரண்மனையை சென்றடையும்.

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

ராஜபிரதிநிதி சோபானம், சாமி ஐயப்பனை தரிசனம் செய்த பிறகு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஐயப்பனின் திருமேனி முழுவதும் விபூதியால் மூடப்பட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு, கையில் யோக குச்சி அணிவிக்கப்பட்டது. பிறகு ஹரிவராசனம் பாடி முடித்த பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.பதினெட்டாம் படியில் பின்னோக்கி இறங்கி வந்த அரச பிரதிநிதி, தேவசம் போர்டு பிரதிநிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ வி நாத்திடம் கோவிலின் சாவியை ஒப்படைத்தார். 2025-2025 சபரிமலை மண்டல-மகரவிளக்கு சீசனின் போது இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு... இந்தாண்டு எத்தனை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்?

டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 17 வரை நடைபெற்ற மகரவிளக்கு உற்சவத்தின் போது மட்டும் 19,00,789 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் 15 துவங்கி, ஜனவரி 17ம் தேதி வரையிலான மண்டல-மகரவிளக்கு காலத்தின் போது மட்டும் 51,92,550 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இந்த சீசனில் மொத்தமாக 25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதன் காரணமாக கோவில் வருமானமும் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget