வெள்ளி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி
நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்து வரும் நிலையில் இன்று ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத பெரும் திருவிழாவில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத பெரும் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்து வரும் நிலையில் இன்று ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தார்.
ஆலயம் வந்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாரதனை காட்டப்பட்ட பிறகு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன சேவையை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்