Karur Temple : கொட்டிய மழை.. குழந்தைகளுடன் பூக்குழி வேண்டுதல்! ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்
Karur Temple ஊரணி காளியம்மன் கோவில் ஐயப்பன் திடலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.
கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளை நடத்தும் ஏழாம் ஆண்டு பூக்குழி (ஆழி) திருவிழா ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பத்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயம் அருகே ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக ஏழாம் ஆண்டு பூக்குழி (ஆழி) திருவிழா கடந்த 26. 11.2024 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து நேற்று 29.11.2024 வெள்ளிக்கிழமை இரவு ஊரணி காளியம்மன் கோவில் ஐயப்பன் திடலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.
அதனை தொடர்ந்து 30.11.2004 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு 7 கன்னிகள் அருள் அனைத்து, நெய் விளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று இரவு ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திரண்டு பூக்குழி (ஆழி) இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி (ஆழி)யை இறங்கினர். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தவாறு கொட்டும் மழையிலும் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அதை தொடர்ந்து இறுதியாக ஏழு கன்னி பெண்கள் பூக்குழி (ஆழி) இறங்கிய பின் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
அதை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை உடன் ஐயப்பன் திடலில் இருந்த அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் தங்களது முளைப்பாரி தலையில் சுமந்தவாறு ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பித்தனர்.
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளை நடத்தும் ஏழாம் ஆண்டு பூக்குழி (ஆழி) திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில், இந்த நிகழ்ச்சியை காண கொட்டும் மலையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் தொடர்ந்து இரண்டு நாட்களாக அன்னதானம் ஐயப்பன் திடல் அருகே நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டை தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.