கரூர் ஸ்ரீ பனையடியான் திருக்கோயில் சித்திரை திருவிழா - பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத திருவிழா.
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பனையடியான் திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து காவிரி ஆற்று தீர்த்தம் புறப்பட்ட நிலையில் தீர்த்தம் வந்தவுடன் மூலவர் பனையடியான் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பானையடியான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து இரவு கரகம் பாலிக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.