ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.
கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதம் தோதும் அமாவாசை மற்றும் பௌர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
துர்க்கை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி உதிரி பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறினார். துர்க்கை அம்மனுக்கு பல்வேறு ஆலாத்திகள் காட்டப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி பூஜையின் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருப் பவித்ர உற்சவம்.
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நடைபெற்றது. கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நித்திய பூஜை யாகமும், கலச பூஜையும் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் மூர்த்திகள் மற்றும் புனிதநீர் கலசங்கள் திருவீதியுலா நடைபெற்றது. அன்ன திருப்பாவாடை, வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை நடைபெற்று சுவாமிக்கு மகாதீபாராதனை காட் டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.