மேலும் அறிய

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. 

கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவினை முன்னிட்டு இன்று மட்டையடி திருவிழா நடைபெற்றது.  ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் ஆருத்ர தரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ர தரிசன விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் கோயில் வளாகத்தில், முன்பு அமைக்கப்பட்ட மேடையில்  மட்டையடி திருவிழா நடைபெற்றது. பசுபதீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து மட்டையடி விழா நடைபெற்றது. வாழை மட்டையை கொண்டு, பக்தர்களை அடிக்கும் விழாவாக இது நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் சிவாச்சாரியாரிடம் மட்டையடி பெற்றனர். முன்னதாக நடராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. ஓதுவார் தண்டபாணி புராண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார் 

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

இந்த மட்டையடியை பெற்ற பக்தர்கள் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் பெறும், வாழ்வில் செல்வம் பெருகும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நினைவில் வைத்துக் கொண்டு சுவாமியிடம் வாழை மட்டை அடி வாங்கிக் கொண்டால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். பின்னர், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர. பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்த சமய அறநிலைக் துறையினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஆகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது நடராஜருக்கு, பால்,தயிர்,இளநீர், மஞ்சள்,பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து மட்டையடி திருவிழா

அதனை தொடர்ந்து நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி,நட்சத்திர ஆரத்தி, மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget