தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்
குளித்தலை அருகே கருப்பத்தூரில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும். கருப்பு வேஷ்டி அணிந்து குருசாமி கைகளால் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

கரூர் நகரப் பகுதியில் கார்த்திகை ஒன்றை முன்னிட்டு ஐயப்பா சேவா சங்க சாஸ்தா ஆலயத்தில் மாலை அணிவித்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் இன்று கார்த்திகை ஒன்றை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆலயத்திற்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில் காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஐயப்பன் உற்சவர் மற்றும் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றை முன்னிட்டு மாலை இட தொடங்கினர். குருசாமி ஆலயம் வருகை தந்து, கன்னிசாமி முதல் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து அனைவரும் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்டம், அய்யர் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கருப்புத்தூர் காவிரி ஆற்றில் புனித நீராடி கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு ஐயப்பன் ஆன்மீக அன்னதான பிரசாத அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.





















