மேலும் அறிய

Kandha Shashti: கந்த சஷ்டி விரதம் இருக்கீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் பக்தியுடன் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறையில் தொடங்கி வரும் சஷ்டி, மகா சஷ்டி என்றும் கந்த சஷ்டி திருவிழா என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா நேற்று முன்தினனம் தொடங்கியது. இதன் காரணமாக அறுபடை வீடு உள்பட உலகெங்கும் உள்ள முருகனின் கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

செய்ய வேண்டியது:

  • சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாளான முருகன் திருக்கல்யாணம் வரை சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விரதத்தை முடிக்கும் வரை தினமும் காலை மாலை இரு வேளை நீராடி, முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும்.
  • சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் வரை அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வருவது சிறப்பு ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் கந்தபுராணம் உள்ளிட்ட முருக புராணங்களை கேட்பது சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினசரி கந்தசஷ்டி இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் மது, புகை உள்ளிட்ட பழங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம் ஆகும்.
  • தேவையற்ற வீண் எண்ணங்களை தவிர்த்து முருக சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
  • விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹார தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும்.

கண்டிப்பாக செய்யக்கூடாதது:

  • முருகனை மனதார நினைத்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
  • யாரையும் கோபத்தில் திட்டவும், யாரிடமும் கோபமாக கத்தவோ கூடாது.
  • விரதம் இருக்கும் நாட்களில் முடிந்தவரை காலணியை தவிர்ப்பது நல்லது ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் சோம்பேறித்தனமாகவோ, பகலில் தூங்கவோ தாமதமாக எழுவதோ கூடாது.

சஷ்டி விரதத்தை தொடங்கியவர்கள் வரும் சூரசம்ஹாரம் நாள் வரை விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்காக முருகன் கோயில்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget