மேலும் அறிய

காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்.

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் 3-வது சனிக்கு சனிக்கிழமையான இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி பெருந்தேவி தாயார்,வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு சாமந்திப்பூ, ரோஜா பூ, தாமரைப்பூ, மலர் மாலைகள் அணிவித்து பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது.

காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
 
புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரம் மற்றும் வெளியூர்,வெளிமாநிலம், வெளிநாடு என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த தொடர்ந்து நீண்ட கியூ வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு பக்தியுடன் வணங்கி வழிபட்டு சென்றனர்.
 
காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
 
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்..
 
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது.  காஞ்சியில்  தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும்.  மூலவர்  வரதராஜப்  பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து  கொண்டுள்ளார்.  பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு  அருள்புரிந்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
 
வரலாறும் சிற்பக்கலையும்:
 
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்.

காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
 
பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பக்கலை மிக்க ஒரே கல்லாலான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.
 
தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் சுமார் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
 
தல வரலாறு : 
 
108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும்,  திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால்  அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget