Kanchi Brahmotsavam: காஞ்சியில் பக்தர்கள் அலையில் கருட சேவை ..பரவசம் அடைந்த பக்தர்கள்..!
"ஊதா நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ,செரனண்பகப்பூ மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர் "




ஜூன் இரண்டாம் தேதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் காலை கருட சேவை (garuda seva) நடைபெறுகிறது. அன்று மாலை அனுமந்த் வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல் ஆகிய விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்
பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.
9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

