Thirumagaraleeswarar Temple: விண்ணை பிளந்த நமச்சிவாய கோஷம்... திருமாகறலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
Kanchipuram Thirumagaraleeswarar: காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
Kanchipuram Thirumagaraleeswarar: காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த திருமாகறலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, செய்யாற்றின் வடக்கரையில் மாகறல் கிராமத்தில் அமைந்துள்ள திருமாகறலீஸ்வரர் கோயில் மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 7வது தலமாக அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் கொண்ட கோயிலாக உள்ளது.
இறைவன் உடும்பின் வால் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அடைக்கலம் காத்த நாதர், உடும்பீசர், மகம் வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங் கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தலத்து ஈசன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். திருப்புவன நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் முருகப்பெருமான் அபூர்வமாக யானை மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
தல வரலாறு கூறுவது என்ன ? -Kanchipuram Thirumagaraleeswarar History
ஒருசமயம் இராஜேந்திர சோழன் இப்பகுதிக்கு வரும்போது, பொன் உடும்பு தோன்றி ராஜேந்திர சோழன் முன் ஓடி ஒரு புற்றில் சென்று மறைந்தார். ராஜேந்திர சோழன் உடன் வந்த வீரர்கள் புற்றைத் தோண்டய போது குருதி வெளிப்பட்டது. சோழ மன்னன் கலங்கி இறைவனை வேண்ட, அவரும் உடும்பு வடிவில் வந்தது தாமே என்றும், அங்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அசரீரியாக அருளினார். அதனால் இத்தலத்து மூலவர் உடும்பு வடிவில் காட்சி தருகின்றார். மூலவர் சிவபெருமான் உடும்பு வடிவிலும் சுயமாகவும் காட்சி தருவது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.
மாக்கிரகன் என்னும் அசுரன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மாக்கிரகீஸ்வரர் என்ற நாமம் பெற்று, பின்னர் மருவி மாகறலீஸ்வரர் என்று மாறியது. பெரிய ஆவுடை, உடும்பு வடிவ மெல்லிய பாணம். இவருக்கு அடைக்கலம் காத்த நாதர், உடும்பீசர், புற்றிடம் கொண்டார், அகத்தீஸ்வரர் ஆகிய திருநாமங்கள் உண்டு. அம்பாள் 'திரிபுவன நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோயில் மகா கும்பாபிஷேகம் - Kanchipuram Thirumagaraleeswarar kumbabishekam
சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்த 3 தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை நான்கு மணி அளவில் நான்காம் காலை பூஜைகள் நிறைவுற்றின் கலச புறப்பாடுகள் திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து ராஜகோபுரம் மூலவர் விநாயகர் பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து பரிகார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை முதலில் அதிகன மழை பெய்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்வின்போது சிறிது நேரம் மழை ஓய்வெடுத்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் இறையருள் பெற்றனர்.