மேலும் அறிய
Advertisement
காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!
கும்பாபிஷேகத்தை காண சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளகொடி கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளகொடி கோயில் தோப்பு தெரு உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கோயில் நிர்வாகி சார்பில் கோவில் புரணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகாமையில் உள்ள வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று. இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
புனித நீர் ஊற்றப்பட்டது
அதன்பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண மேலும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் என்றால் என்ன ?
கும்பாபிஷேகம் (அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும்.
எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion