Vilakkoli Perumal Temple: கோவிந்தா கோவிந்தா என முழக்கம்..! விளக்கொளிப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..!
Arulmigu Sri Vilakkoli Perumal Temple: விளக்கொளிப் பெருமாள் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
![Vilakkoli Perumal Temple: கோவிந்தா கோவிந்தா என முழக்கம்..! விளக்கொளிப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..! Kanchipuram, one of the 108 Divya Desams Arulmigu Sri Vilakkoli Perumal Temple held the Maha Kumbabhishekam TNN Vilakkoli Perumal Temple: கோவிந்தா கோவிந்தா என முழக்கம்..! விளக்கொளிப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/08/17df65f4b3aab57280958a6cd9b15e2f1720411253898739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா ( Kumbhabhishekam )
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோயில்களுக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும் கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசத்தங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.
தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது. மிகவும் முக்கியம் வாழ்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச் சிறிய கோவில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள்.
விளக்கொளிப் பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக் காஞ்சிபுரத்தில் கிரை மண்டபம் அருகே அமைந்துள்ளது விளக்கொளிப் பெருமாள் கோயில் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பிரம்மா யாகம் செய்த போது ஏற்பட்ட இருளை நீக்கிடவும், யாகத்தை இடையூறு இல்லாமல் நடத்தவும் பிரம்மன் பெருமாளை சரணடைந்தார். அந்த நேரத்தில் பெருமாள் விளக்கொளியாய் அவதரித்து யாகம் சிறப்பாக நடைபெற உதவி செய்ததால் இப்பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் திபப்பிரகாசர் என்றும் பெயர் உண்டானது.
மகா சம்ப்போஷணம்
இக்கோயில் கொடிமரம் உட்பட ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்போஷணம் நடைபெற்றது. சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 5 வது நாளாக யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்களால் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மகா சம்ப்ரோஷண ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் பூவழகி, தக்கார் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)