Kanchipuram Ekambaranathar Temple: சிவாய நம கோஷத்தால் குலுங்கிய காஞ்சிபுரம்! 17 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரம்நாதர் கோயில் கும்பாபிஷேகம்!
Kanchipuram Ekambaranathar Temple Kumbabishekam 2025: "17 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது"

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா, ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு விமர்சியாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3500 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29 மதிப்பில் கோவில் ராஜா கோபுரம், 1000 கால் மண்டபம், மூலவர் என அனைத்து பகுதியும் புராணமைப்பு செய்து பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 5:45 மணிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது,
கும்பாபிஷேக விழா
68 யாகம் குண்டுகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மூன்று நாட்களாக யாக சாலையில் நடத்தி வந்த யாகங்கள் அதிகாலை 4:30 மணியளவில் புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கோபுரங்களுக்கு எடுத்து சென்றனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி பின் 6:30 மணியளவில் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழக முழுவதுமிலிருந்து 50க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர்.
காவல்துறை பல்வேறு கட்டுப்பாடு
கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரிஷி கோபுரத்தில் நுழைவு வாயிலில் கோவில் பெயரை மலர்களால் எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு பக்தர்களை கவர்ந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, பக்தர்கள் கோவில் சன்னதி வழியாக மட்டுமே அனுபதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ராஜா கோபுரத்தில் இருந்து ஆலயத்துக்கு உள்பகுதியில் வரிசையாக வருவதற்கு தடுப்புகளை காவல்துறையினர் அமைந்துள்ளனர்.
கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட 4 மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அங்கங்கே போலீசார் சிறிய கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைந்து பள்ளிகள் மற்றும் கோவிலை சுற்றி அருகாமையில் உள்ள கிராமம் பள்ளிகள் என 149 பள்ளிகள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார். இதன் பின் 12 மணியளவில் மஹா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
தல வரலாறு கூறுவது என்ன ? Temple History (Sthala Varalaru/Puranam)
புராணப்படி இக்கோவில் உருவானதற்கு முக்கிய கதை ஒன்று கூறப்படுகிறது. ஒருமுறை பார்வதி, சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடியதால் உலகமே இருண்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஜீவராசிகள், பாதிப்படைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து உலகத்திற்கு வெளிச்சம் தந்தார் என நம்பப்படுகிறது.
பார்வதியின் விளையாட்டால், பார்வதி மீது சிவன் கோபம் கொண்டார். இதனைத் தொடர்ந்து பார்வதி பூலோகம் வந்து, சிவபெருமானின் கோபம் குறைய வேண்டி சிவபெருமானை நோக்கி, தவமிருந்தார். மணல் லிங்கம் செய்து, மாமரத்தின் அடியில் பல ஆண்டுகள் பார்வதி தான் தவமிருந்ததை கண்டு சிவபெருமான் வியந்தார். அவரது தவத்தை உலகம் அறியும் வகையில், சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து, செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதி தேவிக்கு காட்சியளித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாமரம் தான் கோவிலின் தல விருச்சகமாக இருந்து வருகிறது. பார்வதி தேவி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை "தழுவக் குழைந்தார்" என்றும் அழைப்பதுண்டு. இக்கோவில் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கிடையே இருந்த காதலை வெளிப்படுத்தும் கோவிலாகவும் பார்க்கப்படுகிறது.




















