மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : ”இது கோவில் இல்லைங்க இது மருத்துவமனை... “ : தமிழர்கள் அப்பவே அப்படி.. ஒரு வரலாறு..
சோழர்கள் காலத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையாகவும் செயல்பட்ட அப்பன் வெங்கடேசப் பெருமான் கோயில் திருமுக்கூடல் அதிசயமாக திகழ்ந்துவருகிறது
தமிழகத்தில் நம் முன்னோா்களால் நிா்மாணிக்கப்பட்ட திருக்கோயில்கள் சமயம் சாா்ந்த ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டும் இல்லை. ஒவ்வொரு திருக்கோயிலும் தமிழனின் பாரம்பாியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பல நூற்றாண்டுகள் கடந்தும் எடுத்துக்கூறும் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. சமூக மேம்பாடுகள் அனைத்தும் கோயில் சாா்ந்தே நடந்துள்ளன. தமிழனின் முகவாியாக உள்ள அக்கோயில்களைக் காப்பதும் போற்றுவதும் நமது தலையாய கடமையாகும்.
ஆதுலா் சாலை ...
கோயில்களில் இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தது போல அத்திருக் கோயில்களில் மக்கள் உடல்நலம் பேணும் மருத்துவமனைகளும் இருந்தது குறித்து கல்வெட்டுச் செய்திகளின் மூலம் அறிய முடிகின்றது. இந்த மருத்துவமனைகள் “ஆதுலா் சாலை” என்று வழங்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளைப் பராமாிக்கவும் மருத்துவா்களுக்காகவும் தானமாக அளிக்கப்பட்ட நிலம் “வைத்தியவிருத்தி” என வழங்கப்பட்டது. மருத்துவா்களில் அறுவை சிகிச்சை நிபுணா்கள் இருந்ததும் அவா்கள் “சல்லியக்கிாியை” (Surgery) செய்பவா்கள் என்று அழைக்கப்பட்டதையும் அறிய முடிகின்றது.
திருமுக்கூடல்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள “பழைய சீவரம்” என்னும் புராதன தலத்தின் அருகில் பாலாற்றின் மறுகரையில் உள்ளது “திருமுக்கூடல்” எனும் எழில்மிகு திருத்தலம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இத்தலத்திற்கு “திருமுக்கூடல்” என பெயர் பெற்றது . இத்தலத்தின் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தின் அருகில் பாற்கடல் பள்ளிகொண்ட பரமன் ஶ்ரீமந்நாராயணன் நின்ற திருக்கோலத்தில் “அப்பன் வெங்கடேசப் பெருமான்” எனும் திருநாமத்துடன் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். பெருமானின் திருவடியில் பூமிதேவியும் மாா்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா்.
பல்லவர்களால் இந்தப் பெருமாளை வழிபடப்பட்டதற்கு ஆதாரமாக பல்லவன் நிருபதுங்க விக்கிரமவர்மனின் இருபத்து நாலாவது ஆண்டு கல்வெட்டு இங்கே உள்ளது. அந்தக் கல்வெட்டு பெருமாளை ‘விஷ்ணு படாரர்’ என்று அழைக்கிறது. 9-ஆம் நூற்றாண்டிலிருந்தே பல திருப்பணிகள் இந்தக் கோவிலில் நடைபெற்று வந்திருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களும் இந்தக் கோவிலுக்குப் பல்வேறு நிவந்தங்களை அளித்து அவற்றைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கின்றனர். அந்த மரபைத் தொடர்ந்தே முதலாம் ராஜேந்திர சோழரின் மகனான வீர ராஜேந்திரரும் இந்தக் கோவிலுக்கு நிவந்தம் ஒன்றை அளித்து அதை ஒரு நீண்ட கல்வெட்டில் (சுமார் 55 வரிகள் கொண்டது) பொறித்து வைத்துள்ளார்.
வீரராஜேந்திரரின் ஆறாம் ஆட்சிக்காலத்தில் ( கி.பி.1068 ) ஏற்படுத்தப்பட்ட இந்தக் கல்வெட்டு, வழக்கமான சோழர் பாணியில் “திருவளர் திருபுயத் திருநில வலயந்’ என்ற வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியோடு துவங்குகிறது. இந்தக் கல்வெட்டு மூலம் சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கல்லூாி, நடனசாலை மற்றும் மருத்துவமனை ஆகியவை இக்கோவிலில் இருந்தமை குறித்து கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியமுடிகின்றது. வீரராஜேந்திர சோழ மன்னனின் இக்கல்வெட்டு இந்த மருத்துவமனை “வீரசோழன் மருத்துவமனை” என்று அழைக்கப்பட்டதையும் பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளாக (In patient) தங்கி சிகிச்சை பெறும் வசதியோடு இம்மருத்துவமனை விளங்கியதையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இந்த மருத்துவமனையில் நாடிபாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவை சிகிச்சை செய்பவா்,மருந்து சேகாிப்பவா்,பெண் செவிலியா்கள், நாவிதா் மற்றும் உதவியாளா்கள் பணி புாிந்த விபரமும் அவா்களின் ஊதிய விபரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு குறித்தும் கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. மிகப்பொிய இக்கல்வெட்டுத் தொடரிலிருந்து திருமுக்கூடல் தலத்தைக் குறித்த பல அாிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. கோயிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் இந்த மருத்துவனை செயல்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு ஒரு ஆண்டிற்குத் தேவையான மருந்துகள் இந்த மருத்துவமனையில் சேகாிக்கப்பட்டு வைக்கப்பட்டதையும் இக்கோயில் கல்வெட்டுகளில் காணப்படுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
1.பிராஹமியம் கடும்பூாி
2.வாஸாஹாிதகி
3.கோமூத்ர ஹாிதகி
4.தஸமூல ஹாிதகி
5.பல்லாதக ஹாிதகி
6.கண்டிரம்
7.பலாகேரண்ட தைலம்
8.பஞ்சாக தைலம்
9.லசுநாகயேரண்ட தைலம்
10.உத்தம கா்ணாபி தைலம்
11.ஸுக்ல ஸகிாிதம்
12.பில்வாதி கிாிதம்
13.மண்டுகரவடிகம்
14.த்ரவத்தி
15.விமலை
16.ஸுநோி
17.தாம்ராதி
18.வஜ்ரகல்பம்
19.கல்யாணலவனம்
20.புராணகிாிதம்
இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. இம்மருந்துகளைப் பற்றிய விாிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது.திருவிழாக்காலங்களில் நாட்டியமாடும் தேவரடியாா்களுக்கு மானியமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேதம் பயிற்றுவிக்கும் கல்லூாியும் அதில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு உணவு வசதியும் தங்குமிடமும் அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் உடல் சூட்டைத் தணிக்க வாரம் ஒருநாள் தலைமுழுக எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை கல்வெட்டு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தை ஆண்ட மன்னா்பெருமக்களின் பெருமைகளையும் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசாண்ட முறைகளையும் திருமுக்கூடல் தலம் சென்று பாா்வையிட்டு நம் புராதனப் பெருமைகளை உணர வேண்டும். நமது புராதனப் பெருமைகள் மறக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் வருங்கால சந்ததியினரான நம் குழந்தைச் செல்வங்களையும் திருமுக்கூடல் திருத்தலத்திற்கு அழைத்துச்சென்று அாிய இந்த வரலாற்று நிகழ்வுகளை அவா்களுக்கு உணா்த்த வேண்டும். ஆயிரம் ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் மெளன சாட்சியாய் விளங்கும் இத்தலம் பக்தா்கள் வருகையின்றி அமைதியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல கோவில்கள் மருத்துவமனைகளாகவும் இருந்திருப்பது ஆச்சர்யத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion