”கோவிந்தோ கோவிந்தோ” கோஷங்களுடன் முல்லை பெரியாற்றில் இறங்கினார் கள்ளழகர்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகர் பேட்டை பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
உப்பார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் 5000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா மதுரையில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். இந்த நிலையில் இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
அந்த வகையில் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மற்றும் உப்பார்பட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆண்டு தோறும் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். பின்னர் முல்லைப் பெரியாற்று கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகான திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறாது என கிராம கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டனர்.
இதனால் இந்த ஆண்டு உப்பார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகர் பேட்டை பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ”கோவிந்தோ கோவிந்தோ” என கோஷங்களை எழுப்பி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்று கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கள்ளழகர் இறக்கி வைத்தனர். உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமத்தைச் சேர்ந்த 5000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமங்களில் இணைந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை உப்பார்பட்டி கிராமம் மட்டுமே சேர்ந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது.





















