மேலும் அறிய

Thanjavur: மனதார வழிபட்டால் இழந்த அனைத்தையும் மீட்டு தருவார் பிரத்தியங்கரா தேவி

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி.

தஞ்சாவூர்: பக்தர்கள் மனதார வழிபட்டால் இழந்ததை எல்லாம் மீட்டு தந்திடும் அன்னையவள் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி. இந்த கோயில் அமைந்துள்ள இடம் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடியில்தான். இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமோ அதிகம்தான்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் அன்னை

அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறரே; பிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். அதாவது ஐவர் பாடி என்பது பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும்.

பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியது. பயன் அடைந்தனர். சொத்துக்கள், அரசாட்சியை இழந்து வனவாசம் இருந்த காலகட்டத்தில் சாப்பிட வகையில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள்; கடும் தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூறப்பட அதன்படியே அவர்களும் இத்தலம் தேடி வந்தனர்.

இங்கு சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்தாள் பிரத்தியங்கிரா தேவி. நெக்குருகிப் போனார்கள் பாண்டவர்கள். அது சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்கவில்லை. அருகில் ஆலமரம் இருக்கவே மரத்தில் இருந்து இலையைப் பறித்தார்கள். அந்த இலையை, பூக்களாக பாவித்து பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து மனமுறுகி வேண்டிக் கொண்டனர். நெடுங்காலம் இந்த பூஜையைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள்.

ஆத்மார்த்தமான வேண்டுதலுக்கும், பூஜைக்கும் கிடைத்த பலனாக, பாண்டவர்கள் பகைவர்களை வென்றார்கள். வெற்றி வாகை சூடினார்கள். தர்மம் நிலைத்தது. இழந்த கெளரவம், மரியாதை, புகழ், செல்வம், தங்களின் ராஜாங்கம், தேசம் என அனைத்தையும் மீட்டெடுத்தனர் பாண்டவர்கள்.

இதனால்தான் பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்த திருத்தலம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவர். மகோன்னத குணங்கள் நிறைந்தவர்.

நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளை களைந்து, தவிடு பொடியாக்கி அவர்களின் நிலையை மாற்றி இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் மனம் நெகிழ்ந்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

அய்யாவாடி திருத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தோறும் சிறப்பு யாகங்களும், விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடைபெறும்.

மனம் நிலைப்படுத்தி, முழு மனதோடு அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் இத்தலத்து தேவி. இன்னல்களையெல்லாம் துடைத்தெடுத்து அருளுவாள் இத்தலத்து அம்மன். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலை தேடி வந்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்கின்றனர் பக்தர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
திருப்புவனம் பங்குனி தேரோட்டம்: பக்தர்களின் கரகோஷம், சுவாமி தரிசனம்.. தேரில் வலம் வந்த அதிசயம்!
திருப்புவனம் பங்குனி தேரோட்டம்: பக்தர்களின் கரகோஷம், சுவாமி தரிசனம்.. தேரில் வலம் வந்த அதிசயம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Embed widget