Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Alangudi Guru Temple : ’ஆலங்குடி குருஸ்தலம் பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால் இங்கு சென்று குருவை தரிசித்தால் வாழ்வில் வளம் ஏற்படும் என்பது ஐதீகம்’
அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்க கூடிய குரு பெயர்ச்சி வரும் மே மாதம் 1ஆம் தேதி நிகழவிருக்கிறது. துன்பத்தில் இருந்து விடபட, செல்வ செழிப்பாக வாழ, மகிழ்ச்சி பொங்க என அத்தனைக்கும் ஆசி வழங்கும் குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார்.
ரிஷப ராசிக்கு சென்றாலும் மற்ற அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துபவராக குருபகவான் திகழ்வதால் அனைவரும் இந்த பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். குருபகவன் ஆசியை பெறுவதற்கு தமிழ்நாட்டில் பல குருஸ்தலங்கள் இருந்தாலும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலம் உலக புகழ் பெற்றது.
ஆலங்குடியில் இருக்கிறது ஆபத்தாகேஸ்வரர் கோயில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம். பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்ததால் ஆபத்து சகாயர் எனும் இங்குள்ள பெயர் இறைவனுக்கு சூட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது.
’பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் ஆலங்குடி’
நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு இந்த தலம் பரிகாரத்தலமாகவும் விளங்கி வருகிறது. குருவைப் போல் கொடுப்பவர் இல்லை” என்பதால் ஞானசெல்வமான கல்வியிலிருந்து பொருட் செல்வமான பொன்வரை அனைத்தையும் நல்குபவர் குருபகவான் என்பது நம்பிக்கை. ”குருபார்க்க கோடி செல்வம்” என்று சொல்வார்கள் அவ்வாறு சிறப்புமிக்க கோவிலாக ஆலங்குடி கோவில் விளங்கி வருகிறது
’குருவின் கடை கண் பார்வைக்காக ஏங்கும் பக்தர்கள்’
சனீஸ்வரனை நேரடியாக நின்று வணங்க கூடாது என்பார்கள். அதற்கு அவருடைய பார்வை நேரடியாகா நம் மீது பட்டால், அது எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். அவரை எப்போதும் பக்தர்கள் ஒரு பக்கமாக நின்றே வழிபடுவர். ஆனால், குரு பகவானுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவரை எப்படி வேண்டுமானாலும் நின்று பார்க்கலாம், தரிசிக்கலாம், அவரது நேரடி பார்வை கிடைத்தாலும், கடை கண் பார்வை கிடைத்தாலும் நல் அருள்தான். அதனால், குருவின் பார்வை கிடைத்து நம்முடைய வாழக்கையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்ட வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பெயர்ச்சி அன்று ஆல்ங்குடிக்கு வருகை தருவர்.
’பிரம்மாண்டமாக நடக்கும் குருபெயர்ச்சி’
ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும் ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள் அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
’1008 லிட்டர் பால், இளநீர் அபிஷேகம்’
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் சாமிக்கு 1008 லிட்டர் பால் மஞ்சள் இளநீர் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். மேலும் குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார் அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
வரும்26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
’பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்’
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாளான பந்தல் அமைக்கப்படுவார்கள் மேலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதேபோல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சர்பன் செய்து தரப்படும். மேலும் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர் மயிலாடுதுறை திருச்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல நான்கு வீதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுபவர்கள் இடமும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.