மேலும் அறிய

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

Govindavaadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..

இந்து சமயத்தில் நவகிரகங்கள்  மிக முக்கியமானவர்களாக   கருதப்படுகின்றனர்.  ஒரு மனிதனுக்கு  நடக்கக்கூடிய நல்லது கெட்டது அனைத்தும் நவகிரகங்களால் தீர்மானிக்கப்படுவதாக, ஜோதிடர்களும் நம்புகின்றனர். நவகிரகங்களில்  நன்மையை தரும் கிரகமாக ( சுப கிரகம் ) குருபகவான் கருதப்படுகிறார்.

பிரம்மனின்  மானச  மகனான  அங்கீக முனிவருக்கும் , வாசுதாவுக்கும்   குருபகவான் ஏழாவதாக பிறந்ததாக  நம்பப்படுகிறது. மஞ்சள் நிறம்  குரு பகவானுக்கு மிகவும் பிடிக்கும். தேவர்களுக்கு ஆசானாக குரு பகவான் விளங்குவதால்,  இவர் அறிவு, ஞானம்  இவற்றிற்கு மூலவராக விளங்குகிறார். " குரு பார்வை கோடி நன்மை " என கூறுவார்கள் , குரு பகவான் 5 7 9  ஆகிய பார்வை சகல நன்மையும் தரும்,  திருமணம் உள்ளிட்ட யோகங்களை குரு பகவான் அள்ளித் தருவார்.  குரு பகவானின் அருள் இருந்தால்  நினைத்தது நிறைவேறும்  என்பது நம்பிக்கை. சிவனின்  உருவமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார்.

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

காஞ்சிபுரம் கோவிந்தவாடி - தட்சிணாமூர்த்தி திருக்கோயில் ( Govindavadi Agaram Temple )

காஞ்சிபுரம் மாவட்டம்,  காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் என்ற ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவிந்தபாடி அகரம் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார்.  என்பது  நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. கோவிந்தனாகிய திருமால் சிவனைத்துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் " கோவிந்தபாடி" என அழைக்கப்பட்டு வந்தது  நாளடைவில் தற்போது அது  கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து,  ‘குரு கோயில்’ என அழைக்கப்படும்  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் தட்சிணாமூர்த்தி  திருக்கோயில் அமைந்துள்ளது.

இது குரு பரிகார ஸ்தலமாக உள்ளது. இக்கோயில் சிறந்த சைவ - வைணவ - குரு  கோயிலாக  விளங்கி வருகிறது.

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

தட்சிணாமூர்த்தி ( Dakshinamurthy Temple Kanchipuram )

தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோயில். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் நீங்க  தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப பரிகாரம் செய்தால் நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயில் கருவறையில் சுமார் ஆறடி உயரத்தில் அழகிய திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

 தல வரலாறு : ( govindavadi guru temple history in tamil )

முன்பொரு காலத்தில்  குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை இருந்ததாக கூறப்படுகிறது,  இதனை அடுத்து திருமால் இடம் முனிவரிடம்   தன்னை காக்குமாறு  வேண்டிக் கொள்கிறார். இதனை அடுத்து திருமால் ,  பயன்படுத்தி முனிவரை அளிக்க முற்படுகிறார்.  அப்பொழுது முனிவரின் வஜ்ர உடலை  தாக்க முடியாமல் சர்க்கரை ஆயுதம்  தோல்வியை தழுவுகிறது.

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

இதனை அடுத்து சிவபெருமானிடம், சலந்தாசுரனை அளித்தபோது உருவான சக்கரத்தை கேட்டு பெறலாம் என திருமால்  முடிவெடுக்கிறார். அப்பொழுது காஞ்சி மாநகரில் சிவனை வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என  திருமாலுக்கு தேவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.  இதன் அடிப்படையில்  தேகம் முழுவதும் விபூதி இட்டு ,ருத்ராட்ச மாலை  அணிந்து,  தனி தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவபெருமானை வழிபாடு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து, சிவபெருமான் திருமால் முன் தோன்றி சக்கரத்தை கொடுத்தார்  என்பது தல புராணமாக உள்ளது தல புராணமாக உள்ளது.

நன்மைகள் என்னென்ன ?

இங்கு குருவை வழிபட்டால்  உயர் பதவிகள் கிடைக்கும்.  திருமணம் யோகம் கைகூடும்  செல்வ செழிப்பு மேலோங்கும்.  மன நிம்மதி  கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.  தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால்,  தேங்காய் உடைவது போல் துன்பங்கள் மறைந்து,  தீபம்  எரிவதைப் போல் வாழ்க்கை பிரகாசமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது

Govindavadi Dakshinamoorthy Temple : திருமணத்தடை, கடன் தொல்லை தீர்க்கும் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி.. அரிய கோயில் சிறப்புகள்..

திறந்திருக்கும் நேரம் ( Dakshinamurthy Temple Kanchipuram - Timing )

தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி .

அமைவிடத்திற்கு செல்லும் வழி ( Dakshinamurthy Temple Kanchipuram - Address)

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம்   சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  அருகில் இருக்கும் ரயில் நிலையம் திருமால்பூர் ரயில் நிலையம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  திருமால்பூரில் இருந்து   வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கின்றன.  காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.  அரக்கோணத்தில் இருந்து வருபவர்கள் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் பேருந்துகளில் வரலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 22-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 22-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
Embed widget