மேலும் அறிய

திருச்சியில் மேள தாளம் முழங்க காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

திருச்சி மாநகரில் மேள தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரில் 300 சிலைகளும், புறநகரில் 909 சிலைகளும் என 1,209 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டவிநாயகர் சிலைகள் நேற்று ஆற்றில் கரைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் தில்லைநகர், உறையூர், பாலக்கரை, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், விமானநிலையம், காந்திமார்க்கெட், கருமண்டபம், சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும், புறநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சிலைகளும் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 


திருச்சியில் மேள தாளம் முழங்க காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

மேலும் ஊர்வலத்தின் முன்பு அந்தந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் சிலை அமைப்புக்குழுவினர் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுப்பாலத்தை வந்து அடைந்தன. அங்கு சிலைகளை கரைக்க வசதியாக ஆங்காங்கே 6 இடங்களில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சவுக்கு மரத்தால் ஆன தடுப்புகளும் கட்டப்பட்டு இருந்தன. காவிரி பாலத்தில் ஒவ்வொரு சிலையாக வரிசையாக அனுமதிக்கப்பட்டு மேடை மீது வைத்து ஆற்றில் வீசப்பட்டன. அதிக உயரம் கொண்ட சிலைகள் மட்டும் கிரேன் உதவியுடன் ஆற்றில் கரைக்கப்பட்டன. போலீசார் மைக் மூலம் அறிவித்தபடியே சிலைகளை கரைக்கும் பணியை முறைப்படுத்தினர். நேற்று மாலை 4 மணி முதல் சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு 8 மணிக்கு மேல் அதிக விநாயகர் சிலைகள் வரத்தொடங்கின.


திருச்சியில் மேள தாளம் முழங்க காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. அங்கு அமைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி சிலைகள் கரைக்கப்பட்ட காட்சியை போலீசார் கண்காணித்தனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் உதவியுடனும் கண்காணிக்கப்பட்டது.முன்னதாக விநாயகர் சிலை கரைப்பையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை வரை அதிக சிலைகள் வராததால் காவிரி பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியையொட்டி திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவில், துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. திருச்சி மாநகர், புறநகர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. நேற்று இரவு 12 மணி வரை 210 சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தன. நேற்று மாலை முதல் தொடங்கிய சிலைகள் கரைப்பு விடிய விடிய நடைபெற்றது. மேலும்  கோலகலாம பொதுமக்கள் உற்சாகமாக காவேரி ஆற்றில் கொண்டாடினார். 

தலைப்பு செய்திகள்

ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget