மேலும் அறிய

நிலா பெண்ணாக சிறுமி; 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு - எங்கு தெரியுமா..?

அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார். அதன்படி இந்தாண்டு கார்த்திகேயன் மேகலா தம்பதியின் பத்து வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் தை பூசத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நிலா பெண் யார் என்பதை தேர்வு செய்யும் சடங்குகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் மாசடச்சியம்மன் கோயிலுக்கு பால் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து 7 நாட்கள், தங்களது வீடுகளில் இருந்து சிறுமிகள் பலவகை சாதம் தயார் செய்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி சிறுமிகள் வழிபாடு செய்தனர்.

நிலா பெண்ணாக  சிறுமி; 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு - எங்கு தெரியுமா..?

பின்னர் அந்த சாதத்தை சிறுமிகள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த வினோத வழிபாட்டின் 8 ஆவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார். அதன்படி இந்தாண்டு கார்த்திகேயன் மேகலா தம்பதியின் பத்து வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த அதிர்ஷ்டாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். அந்த பூக்களை மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்தனர். சிறுமியின் தலை, கைகளிலும் ஆவாரம் பூவை சூட்டி அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலை மீது வைத்தனர். அந்த கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக  அழைத்து வரப்பட்டாள்.

நிலா பெண்ணாக  சிறுமி; 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு - எங்கு தெரியுமா..?

பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மி அடித்து ஆண்கள், பெண்கள் பாட்டுப்பாடி சிறுமியை சுற்றி வந்தனர். பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்தனர். அங்கு சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர்.  அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். அங்கு கோவில் முன்பு மாவிளக்கு வைத்து, அதன் நடுவே சிறுமியை அமர வைத்து சுற்றி வந்து பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். நேற்று அதிகாலையில் கிராம மக்கள் சிறுமியை, அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்றனர். 

நிலா பெண்ணாக  சிறுமி; 100 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் வினோத வழிபாடு - எங்கு தெரியுமா..?

அந்த கிணற்றுக்குள் படிகள் வழியாக சிறுமியுடன் இறங்கினர். அங்கு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டனர். அவை பந்துபோல மிதந்தது. அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து நிலா பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன், கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.  100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget