மேலும் அறிய

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்த தன்னார்வலர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி

தை அமாவாசையை ஒட்டி காவிரி கரையில் அமர்ந்து வாழை இலை, பச்சரிசி , தேங்காய், பழம், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து ஆதரவற்று இறந்தவர்களை நினைத்து, திதி கொடுத்து வழிபட்டனர்.

தருமபுரி பகுதியில் ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தை அமாவாசையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.
 
தருமபுரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மை தருமபுரி என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றவரை காப்பகத்தில் சேர்த்தல், தினமும் அரசு மருத்துவமனை முன்பு மதிய உணவு வழங்குதல், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை பராமரித்தல் போன்ற பல்வேறு சேவைகளை பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் ஆதரவற்ற நிலையில், பலர் உயிரிழந்து, சடலங்கள் அடக்கம் செய்யப்படாமல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை காவல் துறையினர் உதவியுடன் ஆதரவற்ற நிலையில் கிடந்த சடலங்களை மை தருமபுரி இலவச ஊர்தி சேவை என்ற பெயரில் நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதுவரை தருமபுரி மாவட்டம் முழுவதும் வயது மூப்பு, விபத்து உள்ளிட்டவைகளில் உயிரிழந்த முதியவர், குழந்தைகள் என 80 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து, உறவினர்கள் செய்யும் சடங்குகளை செய்து வருகின்றனர்.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய  தர்ப்பணம் கொடுத்த தன்னார்வலர்கள் - தருமபுரியில் நெகிழ்ச்சி
 
இந்நிலையில் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் தை அமாவாசை தினத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இது போன்ற ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யார் என்று தெரியாத நிலையில், தர்ப்பணம் கொடுக்க முடியாது என்பதால், மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர், இதுவரை 80 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதால், தை அமாவாசையை ஒட்டி காவிரி கரையில் அமர்ந்து வாழை இலை, பச்சரிசி , தேங்காய், பழம், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து ஆதரவற்று இறந்தவர்களை நினைத்து, திதி கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் மூழ்கி, புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர். மேலும் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வரும் நிலையில், சிலர் தங்களது முன்னோர்களை இறந்த பின் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடக்கின்ற சடலங்களை உறவினர்களை போன்று நல்லடக்கம் செய்து, இறுதிச் சடங்குகளை செய்து முடிப்பதோடு நிறுத்தி விடாமல், அவர்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டு வரும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினரின் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget