மேலும் அறிய
Advertisement
புத்தாண்டையொட்டி ஸ்ரீ வீரஆஞ்சநேயருக்கு புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.
ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆலயத்தில் 2024ம் ஆண்டு புதிய ஆண்டு முன்னிட்டு ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பு அலங்காரம் நடைபெற்றது
கோவில் ஆலயத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள புதிய கரன்சி 500, 200, 100, 50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
மேலும் புத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரத்தை காண ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion