மேலும் அறிய

Marvelous Margazhi Fest: ‘மார்வெலஸ் மார்கழி திருவிழா’ - சென்னையில் நடைபெற்ற வித்தியாசமான நிகழ்ச்சி!

கர்நாடக இசை உலகின் பிரபலமான நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இந்த மார்வெலஸ் மார்கழி நிகழ்ச்சி இதுவரை பங்கேற்றிராத ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

மார்கழி மாதம் வந்தாலே, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இசை நிகழ்ச்சிகள் களைக் கட்ட ஆரம்பித்துவிடும். பாடல், இசை, நடனம் என மாநகரின் ஒவ்வொரு அரங்கும் பளிச்சிடும். அத்தகைய நிகழ்வுகளுக்கு முன்னோட்டமாக, கர்நாடக இசையில் பிரபலமான கலைஞர்கள் ஒன்றுகூடி வித்தியாசமான கலாச்சார நிகழ்வொன்று சென்னையில் அரங்கேறியது.  ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த  இந்த 'மார்வெலஸ் மார்கழித் திருவிழா' மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், கர்நாடக இசைக் கலைஞர்களின் மற்ற திறமைகளும் பளிச்சிட்டன என்றால் மிகையில்லை.

பொதுவாக, "ரேம்ப் வாக்" நடை நிகழ்ச்சி, அழகிப் போட்டிகளில் மட்டுமே நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். ஆனால், சென்னை மீனம்பாக்கம் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த "மார்வெலஸ்" மார்கழி திருவிழாவில், இசை, நடனம், பாடல் என பல்வேறு துறைகளில் தங்கள் தனித்துவத்தை நிரூபித்த பிரபலங்கள் ‘ரேம்ப் வாக்’ செய்து அசத்தினர்.   சென்னையின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த மார்கழித் திருவிழா, ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது என்பதைக் கண்கூடாக உணரமுடிந்தது.

ராகுல் வெள்ளால், ஸ்டீவன் சாமுவேல் தெவஸ்ஸே ஆகியோரின் பின்னணி இசையில், பாடகர்கள் அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி, சுதா ரகுநாதன், பிரியா சகோதரிகள், உன்னிகிருஷ்ணன், உத்ரா உன்னிகிருஷ்ணன், சிக்கில் குருசரண், சந்தீப் நாராயண், ராதே ரித்விக் ராஜா ஆகியோர் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர். 

பத்மா சுப்பிரமணியம், காயத்ரி, மஹதி, ஷோபனா, ஊர்மிளா சத்தியநாராயணன், மீனாக்ஷி சித்தரஞ்சன், உமா முரளி கிருஷ்ணா, பிரியதர்ஷினி கோவிந்த், ஶ்ரீகலா பரத், கோபிகா வர்மா ஆகிய கலைஞர்களின் அசத்தல் நடையும் அரங்கை அசத்தியது. 

மார்வெலஸ் மார்கழி நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாக, இதுவரை காணக்கிடைக்காத லால்குடி ஜி.ஜே.ஆர் கிருஷ்ணன், விஜி வயலின் கணேஷ், குமரேஷ் ஷசங்க், ஶ்ரீஷா ஜெயந்தி குமரேஷ், கண்ணன், மாண்டலின் ராஜேஷ், அணில் சீனிவாசன் ஆனந்தா, சாருமதி விஜி கிருஷ்ணன் ஆகியோரின் ‘ரேம்ப் வாக்’ அரங்கை அழகூட்டியது. இந் நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகையும் பிரபலமான பரத நாட்டியக் கலைஞரான வைஜெயந்திமாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். 

கர்நாடக இசைப் பிரபலங்களில் பாட்டு திறமை, இசைப்பு திறமை, நாட்டிய திறமை ஆகியவற்றை மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரசிகர்களுக்கு, அவர்களின் "ராம்ப் வாக்" நிகழ்ச்சி, பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம். 

கர்நாடக இசை உலகின் பிரபலமான நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இந்த மார்வெலஸ் மார்கழி நிகழ்ச்சி இதுவரை அவர்கள் பங்கேற்காத  ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

கலைகளின் கலவையை பிரதிபலித்த இந்த ‘ராம்ப் வாக்’கை மிகப்பிரமாண்டமாக வழங்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த மார்வெலஸ் மார்கழி திருவிழாவை, ஈவெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைக்க, பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ, பிராண்ட் அவதார் ஹேமசந்திரன் சிறப்பாக நிர்வகித்து வழங்கினர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Embed widget