3 நாட்களாக 3 வேளையும் 28 ஆயிரம் பேருக்கு அன்னதானம் - 10 ஆண்டுகளாக சேவை செய்யும் ஐயப்ப பக்தர்கள்
90 மூட்டை அரிசியை கொண்டு 28,000 பேர் சாப்பிடும் வகையில் காலை இரவு டிபன் மற்றும் மதிய உணவாக வடை, பாயாசத்துடன் சைவ விருந்தும் தயார் செய்து வழங்கப்படுகிறது.
வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை கொடி காட்டி நிறுத்தி 3 நாட்களாக 3 நேரமும் 28 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய ஐயப்ப பக்தர்கள்.
சென்னை கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ மணிகண்ட ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக தொடர்ந்து 10-வது ஆண்டாக வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் 3 நாட்களாக மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?
சென்னை சேர்ந்த 164 ஐயப்ப பக்தர்கள் குடும்பத்தினர் தங்களது சொந்த பங்களிப்பில் உணவுக்கான பொருட்களை சென்னையிலிருந்து வாங்கி வந்தனர். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் தெய்வமான, அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் தங்கி அவர்களே சமைத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் 3 நேரமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஊர் பொது மக்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும், நெடுஞ்சாலையில் பயணம் செய்வோருக்கும் அன்னதானம் வழங்கினர்.
தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?
Vegetable Price: கொட்டு மழை.. ஏற்ற இறக்கத்தில் காய்கறி விலைகள்.. இன்றைய பட்டியல் இதோ..
90 மூட்டை அரிசியை கொண்டு 28,000 பேர் சாப்பிடும் வகையில் காலை இரவு டிபன் மற்றும் மதிய உணவாக வடை, பாயாசத்துடன் சைவ விருந்தும் தயார் செய்து வழங்கப்படுகிறது. மேலும் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை கொடி காட்டி நிறுத்தி, அவர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீ மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியபோது, அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்பதால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் சொந்த பங்களிப்பில் இதுபோல் அன்னதானம் வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.