மேலும் அறிய

5 ஆண்டுகள் காத்திருப்பு.. காஞ்சிபுரம் மக்களே கொண்டாட தயாரா! அஷ்டபுஜ பெருமாள் கோயில் சொர்க்கவாசல்! 

Ashtabhuja Perumal Temple: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசலில் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு தச அவதாரங்கள், ராமாயணம், மகாபாரத நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கோயில் நகர் 

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், காஞ்சியில் பிரசித்தி பெற்ற 44வது திவ்ய தேசமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 

காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் 

தமிழகத்தின் பழைமையான திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோவில், தன் சிறப்புமிக்க கட்டிடக்கலை, வரலாற்றுப் பின்னணி மற்றும் பக்தர்களின் அபிமானம் ஆகியவற்றால் புகழ்பெற்றது.

பழங்காலத்தில் இந்திரன் தன் பதவியை இழக்கும் அபாயத்தில் இருந்து மீள, பெருமாளை வழிபட்டு இக்கோவிலில் மோட்சம் அடைந்தான் என்பது புராணக் கதை. மேலும், மகாசந்தன் என்ற யோகி தவம் செய்து பெருமாளை தரிசித்த தலமாகவும் இது கூறப்படுகிறது.

சொர்க்கவாசல் :

மேலும் திருக்கோயில் காஞ்சிபுரத்தில் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலமாக அமைந்துள்ளது. மேலும் இதில் கோயில் ராஜகோபுர வாசலும் பரமபத வாசலும் நேர் எதிர் கொண்ட திருத்தலமாக விளங்குகிறது. 

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வரும் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சுப்ரபாத சேவை, விஸ்வரூப சேவை, நிஜ பாத சேவை என பல்வேறு நிகழ்வுகளும் திருக்கோயில் சார்பாக நடைபெறுகிறது. 

முன்னேற்பாடுகள் என்னென்ன ?

இந்நிலையில் வைகுந்த ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருக்கோயில் அறங்காவலர் தலைவர் சந்தோஷ்குமார் கூறுகையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவ விழாக்கள் மட்டுமே சிறப்பாக காணப்படும் நிலையில், இந்த திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி சிறப்பு விசேஷமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை புரியும் நிலை உள்ளதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

ரத்னாங்கி சேவை

முதல் முறையாக உச்சவ பெருமாளான ஸ்ரீ ஆதிகேச பெருமாள் ரத்னாங்கி  அணிந்து சேவை சாதிக்க உள்ளார். சொர்க்கவாசல் வழியில் உள்ள கதவுகள் வெள்ளி தகடுகளால் அழகிய சிற்ப அமைப்புகளுடன் அமைந்துள்ளது. வைகுந்த ஏகாதசி என்று திருக்கோயில் உடபிரகாரத்தில், அனைத்து பகுதிகளிலும் சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார். 

ராஜகோபுரம் வழி சிறியதாக இருப்பதால், பொதுமக்கள் நெரிசலின்றி செல்லும் வகையில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு திருக்கோவிலின், பின் வழியாக தோட்ட மண்டபத்தில் உற்சவரை தரிசித்து வெளியே செல்லும் சிறப்பு வழியும் முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்படும் எனவும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து இறையருள் பெருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின் போது அரங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவிகா இளங்கோ மற்றும் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Embed widget