மேலும் அறிய

அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்.. திருப்பதிக்கு டப் கொடுத்த பக்தரின் செயல்..

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏழு லட்சம் மதிப்பிலான காணிக்கையாக வழங்கிய 7 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை வழங்கினார்

புக‌ழ்பெ‌ற்ற ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏழு லட்சம் மதிப்பிலான காணிக்கையாக வழங்கிய 7 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை வழங்கினார் 

பெருமாளுக்கு தங்க கிரீடம் 

காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சொர்க்கவாசல் இருக்கும் ஒரே கோவிலான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாளுக்கு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்களான B.M. மிதுலன், பழனி , கோவிந்தராஜ்,  நாராயணன்  ஆகியோர் தங்க கிரீடம் சாற்ற விரும்பினர். அதன்படி ரூ.7 லட்சம் மதிப்புள்ள சுமார் 6.400 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிரபல B.M. மிதுலன் நகைக்கடையில் தயாரிக்கப்பட்டது.  

அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்.. திருப்பதிக்கு டப் கொடுத்த பக்தரின் செயல்..

சிறப்பு அபிஷேகம்

காணிக்கையாக காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு வழங்கினர். இந்த தங்க கிரீடத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் இடம் வழங்கி சன்னதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு வந்து அஷ்டபுஜ பெருமாளுக்கு சாற்றினார். பிறகு கற்பூர, தீபாராதனை காட்டப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமை ஓட்டியும், முதல் முறையாக பெருமாளுக்கு தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.  முக்கிய திருவிழாக்களின் போது அஷ்டபூஜ பெருமாள், தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

கோயில் நகரமாக போற்றக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்த போது இருந்து வருகிறது. இந்த கோயில் 44 வது திவ்ய தேசமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேச தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் எட்டு கரங்களுடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.

அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்.. திருப்பதிக்கு டப் கொடுத்த பக்தரின் செயல்..

ஒருமுறை சரஸ்வதி தேவிக்கு, லட்சுமி தேவி பெரியவரா, தான் பெரியவரா என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி பிரம்மாவின் மனைவி சரஸ் தனது கணவர் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கு பிரம்மா லட்சுமி உயர்ந்தவர் என தெரிவித்ததால் பிரம்மாவின் மனைவி கோபம் அடைகிறாள். இதனைத் தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் சரஸ்வதி முறையிட்டபோது, அவர்களும் லட்சுமி பெரியவள் என கூறியதால் ஆத்திரமடைந்து சரஸ்வதி பிரம்மாவை பிரிந்து செல்கிறார். 

அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்.. திருப்பதிக்கு டப் கொடுத்த பக்தரின் செயல்..

இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் பிரம்மா அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அஸ்வமேத யாகம் செய்யும்போது எப்போதும் மனைவியுடன் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்த போது அதை மீறி, பிரம்மா செயல்பட்டதால் மீண்டும் கடும் கோபம் அடைந்த சரஸ்வதி யாகத்தை தடுக்க பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டார். அதன்படி வேகவதி நதியாக வந்து தியாகத்தை தடுக்க முயற்சி செய்தபோது பெருமாள் அதிலிருந்து யாகத்தை காத்தருளினார். தொடர்ந்து யாகத்தை கெடுக்க பூதத்தை சரஸ்வதி ஏறிவிட்டார். கூட்டத்தை அழிப்பதற்காக திருமால் 8 கரங்களுடன் அவதாரம் எடுத்து பூதத்தை அளித்தார், என்பது இந்த கோயிலில் தல வரலாறு உள்ளது.

யானையை காப்பாற்றிய பெருமாள்

ஒரு முறை கஜேந்திரன் என்ற யானை திருமாலிடம் மிகுந்த பக்தியாக இருந்து வந்தது. தினமும் ஒரே குளத்தில் இருந்து தாமரை பூவை எடுத்து வந்து பெருமாளுக்கு பூஜை செய்வதை யானை வழக்கமாக கொண்டு வந்தது. அப்போது ஒரு நாள் சென்ற போது குலத்தில் இருந்த முதலை யானையை தாக்கி, யானையின் கால்களை இருக்க பற்றி கொண்டது.

அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்.. திருப்பதிக்கு டப் கொடுத்த பக்தரின் செயல்..

என்னதான் யானை பலமாக இருந்தாலும் தண்ணீரில் முதலை பலம் என்பதால் யானையால் வெளிவர முடியாமல் இருந்தது. உடனடியாக யானை பெருமாளை நோக்கி காப்பாற்றுங்கள் என  யானை முறையிட்டது. உடனடியாக திருமால் 8 கரங்களுடன் கருடன் மீது வந்து யானையை காப்பாற்றினார் என்பது ஐதிகமாக உள்ளது. அதே திருக்கோளத்தில் இந்த கோயிலில் திருமால் காட்சி அளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR on Trichy flight landing : AR Rahman Kamala Harris : OK சொன்ன ரஹ்மான்! கமலா ஹாரிஸ்-க்கு SUPPORT! 30 நிமிட பாடல் ரெடிRahul Gandhi : எதிர்க்கட்சி தலைவர் மாற்றம்? ராகுலை எதிர்க்கும் I.N.D.I.A? பற்றவைக்கும் பாஜகThiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
கவரப்பேட்டை ரயில் விபத்து: கொதித்தெழுந்த ராகுல் காந்தி; சொன்ன அந்த வார்த்தை.!
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
Vidyarambham : ”வெற்றியை தன்வசமாக்கும் வித்யாரம்பம்” குழந்தைகள் கல்வித் தொடங்க ஏற்ற நாள்..!
10th 12th Exam dates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10th 12th Exam dates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Embed widget