ABP கோயில் உலா: அகஸ்தியர் வழிபாடு செய்த கோயிலில் தீமிதி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
குத்தாலம் அருகே அகஸ்தியர் வழிபட்ட 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் திருக்கோயில் நடைபெற்ற தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
குத்தாலம் அருகே அகஸ்தியர் வழிபட்ட 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் திருக்கோயில் நடைபெற்ற தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
ஆட்டூர் மங்கள மகா மாரியம்மன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமத்தில் அகஸ்தியர் வழிபாடு செய்த மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மங்கள மகா மாரியம்மன் இப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும், பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்திகொண்டு விளங்கி வருகிறார்.
20-ம் தேதி துவங்கிய ஆண்டுவிழா
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் ஆண்டு திருவிழாவான தீமிதி திருவிழா கடந்த 20 -ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை தீமிதிக்கு காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக நண்டலாறு ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் முன்செல்ல, விரதம் இருந்த பக்தர்கள் வானவேடிக்கைகள், மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.
Vikravandi By Election Result LIVE: விக்கிரவாண்டி : திமுக தொடர்ந்து தொடர்ந்து முன்னிலை
தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் பக்தியுடன் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதல் நிறைவேறிய அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மங்கள மகா மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆலய ஸ்தாபகர் வெங்கடேஷ் நாராயணசாமி ஐயர், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா பாஸ்கரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவின் நிறைவு நாளான தீமிதி அன்று 306 இளநீர் அபிஷேகம், தயிர் பல்லையம், அகஸ்தியர்க்கு சம்பா பல்லையும், சாம்பார் சாதம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.