Aadi Festival 2023 : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
பெரும்பாலான பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழுப்புரம்: உலகப் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் வடிவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும். ஆடி அமாவாசை, தை, மாசி, அமாவாசை விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இன்று ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆடி அமாவாசை தினமான இன்று காலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆடி அமாவாசை முன்னேற்பாடு:-
எனவே இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 11-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பக்தர்கள், பொதுமக்களின் கூட்ட நெரிசல், போக்குவரத்தை முறைப்படுத்திடும் விதமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் கீழ்கண்ட விவரப்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் வடிவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/