மேலும் அறிய

Aadi Amavasai 2024: தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்

வெறிச்சோடி கிடக்கும் காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மற்றும் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர்நிலைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்காக திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை 

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது  ஐதீகம். அந்தவகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். 

Aadi Amavasai 2024: தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்

ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையின் சிறப்பு 

ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

IPS Transfer: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - மேற்குமண்டல ஐ.ஜி. ஆக செந்தில்குமார் நியமனம்

Aadi Amavasai 2024: தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்

பூம்புகாரில் வழிபாடு 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் படை எடுத்து வழிபாடு செய்வார்கள்.

Aadi Amavasai 2024: தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்

காவிரி துலாக்கட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள்  உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும். 

Aadi Amavasai 2024: தண்ணீர் இல்லாததால் காவிரி துலாக்கட்டத்தில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்

ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் 

இந்த சூழலில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் காலதாமத திறக்கப்பட்டது. இருந்த போதிலும் ஆடி அமாவாசைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் முறையான திட்டமிடல் இல்லாததால் இன்று (நேற்று) வரை காவிரி துலாக்கட்டத்திற்கு காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசையான நேற்று அதிகாலை முதல் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.  இருந்த போதிலும், மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் அப்பர்சுந்தரம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் மூலம் காவிரி துலாக்கட்டத்தில் தற்காலிக தண்ணீர் விட்டும், ஷவர் அமைந்து கொடுத்தும் பக்தர்கள் நீராட வழிவகை செய்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget