மேலும் அறிய

Aadi Amavasai 2023: ஆடி சோமவார அமாவாசை...கோயிலில் குவிந்த பக்தர் கூட்டம்..களைகட்டிய காஞ்சிபுரம்..!

Aadi Amavasai 2023: சோமவார அமாவாசையை ஒட்டி கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.

சோமவார அமாவாசையை ஒட்டி கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.
 
சோமவார அமாவாசை (somavara amavasai ) 
 
காஞ்சிபுரம் (Kanchipuram News): திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை (somavara amavasai) பெண்கள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் தாய், தந்தை இழந்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அன்னதானம் செய்வது வழக்கம். அதுவும் குறிப்பாக திங்கட்கிழமையன்று, வரும் அமாவாசை அன்று திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் திருமணம் ஆகி குழந்தை பேறு வேண்டி இருக்கும், பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. அரச மரத்தின் கீழ் உள்ள விநாயகர் மற்றும் நாகர் களை மஞ்சள் குங்குமம் வைத்து எலுமிச்சை மற்றும் தேங்காயில் தீபமேற்றி அரசமரத்தை சுற்றி வருவார்கள்.

Aadi Amavasai 2023: ஆடி சோமவார அமாவாசை...கோயிலில் குவிந்த பக்தர் கூட்டம்..களைகட்டிய காஞ்சிபுரம்..!
 
ஆடி மாத சோமவார அமாவாசையான இன்று காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோயிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பெண்கள் நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை சுற்றி வந்தனர். சோமவார அமாவாசை மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று, நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை, சுற்றி வந்தால் கன்னி பெண்களுக்கு திருமணம் கைக் கூடும் என்பது நம்பிக்கை.

Aadi Amavasai 2023: ஆடி சோமவார அமாவாசை...கோயிலில் குவிந்த பக்தர் கூட்டம்..களைகட்டிய காஞ்சிபுரம்..!
 
மேலும், குழந்தை பேறு பாக்கியம் கிடைப்பதற்கும், நாக தோசம் உள்ளவர்களும் ஆடி மாத சோம வார அமாவாசையான இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில், அரச மரத்தடியில் உள்ள நாக சிலைகளுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பெண்கள் பூஜை செய்தனர். பூஜை செய்த பின் அரச மரத்தை வலம் வந்து வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.
 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வரலாறு  ( kanchipuram kachabeswarar temple ) 
 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது. 10 ஆம் நூற்றாண்டு தண்டியலங்காரத்தில் "கனல் மழுவன் கச்சாலை எம்மான்' என்ற மேற்கோள் பாட்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளதால், பல்லவர் காலம் முதல் இத்திருக்கோயில் இருந்திருக்கிறது. ஆலயத்தில்  அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் இட்ட சித்திக் தீர்த்தம் ஆகும்.  இக்குளத்தில் மூழ்கி  குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார்.

Aadi Amavasai 2023: ஆடி சோமவார அமாவாசை...கோயிலில் குவிந்த பக்தர் கூட்டம்..களைகட்டிய காஞ்சிபுரம்..!
 
இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பவர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என்றும் சிவஞான  முனிவர் அருளியுள்ளார். இந்த இட்ட சித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி  அறிவைப் பெறுவர். 
 
மேலும் , பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன்  வாழ்வர் மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள், என்று மாதவச்  சிவஞான முனிவர் அவர்கள் திருக்குளத்தைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget