Mayiladuthurai: மயிலாடுதுறையில் நடந்த ஜோதிட தேர்வு... 10ம் வகுப்பு மாணவர் முதல் 60 வயது முதியவர் வரை ஆர்வத்துடன் பங்கேற்பு!
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜோதிட தேர்வில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் முதல் 60 வயது முதியவர் என ஏராளமானோர் ஆர்வத்துடன் தேர்வு எழுதியுள்ளனர்.
ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பலரும் ஆர்வத்துடன் ஜோதிடம் பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஜோதிடம் பயின்றவர்களுக்கான, தேர்வுகள் மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது.
இந்த தேர்வானது அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றன. மயிலாடுதுறை , நாகப்பட்டினம், தஞ்சை, மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175 பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் முதல் 60 வயது முதியவர் வரை ஆடவர் பெண்கள் என்று இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட கலையில் பயின்று, தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜோதிட கலாநிதி, ஜோதிட ரத்னா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஸ்ரீ சோமரிஷி ஸ்ரீ ஹரிஹரா ஆன்மீக ஜோதிட வித்யாலயம் சார்பில் நடைபெற்ற தேர்வுகளை ஜோதிட ஆசான் தமிழரசன் நடத்தினார். பல்வேறு போட்டித் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் போன்று ஜோதிட தேர்வும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் சிறப்பாக நடைபெற்றது பலரது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.