வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த சீர்காழி கீழத்தெரு பத்திரகாளி அம்மன் - பரவசமடைந்த பக்தர்கள்
சீர்காழி கீழத்தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற வளையல் அலங்கார உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழத்தெருவில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற வளையல் அலங்கார உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
களைகட்டும் ஆடி திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த சில நாட்களாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
காளிபுரம் என்ற சீர்காழி
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காளிபுரம் என்ற புராண பெயர் உடைய சீர்காழியில் திரும்பும் திசையெல்லாம் காளியம்மன் கோயில்கள் இருப்பது சிறப்பு. இதில் பிடாரி தெற்கு வீதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுத் திருவிழாவான தை மாதம் தீமிதி உற்சவம் பத்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது நடைபெறும்.
பத்ரகாளியம்மன் கோயில் சிறப்புகள்
அதேபோன்று அனைத்து விசேஷ தினங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறும். மேலும் இவ்வாலயத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியம், கடன்தொல்லை, மனக்கோளாறுகள் என பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்து வேண்டி வண்ணம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆகையால் நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு, தங்கள் வேடுதலை வைத்தும், நிறைவேறிய வேண்டுதல்களுக்கு நன்றி கடன் செலுத்தியும் வருகின்றனர்.
வளையல் அலங்காரம்
இந்நிலையில் ஆடிமாதம் பிறந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளது. அதன் ஒன்றாக இந்த பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோயிலும் ஆடிமாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. இதற்காக சீர்காழியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு வளையலை காணிக்கை அளித்தனர். அதைக்கொண்டு அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம்இளைஞர் செய்திருந்தனர்.





















